Published : 03,Jul 2017 10:47 AM

கர்ணனின் தண்டனைக்கு ரத்து கோரிய மனு: விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு

Judge-Karnan-s-case-issues

முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

வழக்கறிஞர் நெடும்பாரா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரிசித்த தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு கர்ணன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என திட்டவட்டமாக கூறிவிட்டது. கர்ணனுக்கு ஜாமீன் கோரும் மனுவை விசாரிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதே மனுவை விடுமுறைக் கால அமர்வும் விசாரிக்க ஏற்கனவே மறுத்திருந்தது. இம்மனுவை விசாரிக்க முடியாது என 2 முறையும் நீதிபதிகள் மறுத்துவிட்டதை அடுத்து கர்ணன் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது கொல்கத்தாவில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெற்று வருகிறார். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்