நீலகிரி மாவட்டம் குன்னூர் பேரட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெகதீசன் மகன் நரேந்திரன். இவர் மன உளைச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவர் எழுதிய கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து அதில் அவர் குறிப்பிட்டிருந்த கண்ணன்,நித்யா,கஸ்தூரி, ஆகியோரை வெலிங்டன் காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்
குன்னூர் வெலிங்டன் ஸ்டாப் காலேஜில் பணியாற்றி வருபவர் நரேந்திரன், இவரது தந்தை ஜெகதீசன் பேரட்டி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவருக்கும் பேரட்டி பஞ்சாயதிற்கு உட்பட்ட பாரதி நகரில் குடியிருக்கும் கண்ணன், நித்யா, கஸ்தூரி, குடும்பத்தினருக்கும் வீடு கட்டி முடித்து , பேரட்டி பஞ்சாயத்தில் அனுமதி பெறுவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக பேரட்டி பஞ்சாயத்து தலைவரின் மகன் நரேந்திரன் தங்களை அடித்து விட்டதாக கண்ணன் குடும்பத்தினர் வெலிங்டன் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தனர்.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் நரேந்திரன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நஞ்சு அருந்திய அவர் பின்னர் வீட்டின் முற்றத்தி்ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெலிங்டன் ஆய்வாளர் பிலிப் தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில் நரேந்திரன் எழுதிய கடிதம் சனிக்கிழமை காவல் துறைக்கு கிடைத்தது இதில் அவர் குறிப்பிட்டிருந்த மூன்று பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர், விசாரணைக்குப் பின் கண்ணன்,நித்யா,கஸ்தூரி, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)
Loading More post
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்