Published : 05,Sep 2020 08:50 PM

“ I am a தமிழ் பேசும் indian; இந்தி தெரியாது போடா.’’. - வைரலாகும் யுவன் போட்டோ..!

Yuvan-Shankar-Raja-against-Hindi-dumping

 

இந்தி திணிப்பு குறித்து சமீப நாட்களாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அணிந்துள்ள டி-சர்ட் வைரலாகியுள்ளது.

 கடந்த 1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் உலகையே உற்றுநோக்க வைத்தது. அந்த எதிர்ப்புதான் திமுகவை கடந்த 1967 ஆம் ஆண்டு ஆட்சியில் அமரவும் வைத்தது. இந்நிலையில், சமீபத்தில் கனிமொழி எம்.பி இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இயக்குநர் வெற்றி மாறன்கூட இதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

image

அதேபோல இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆயுஷ் அமைச்சகம் நடத்திய மருத்துவர்கள் கருத்தரங்கில் ‘இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம்’ என்று ஆயூஷ் அமைச்சக செயலாளர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது டிசர்ட்டில் “ I am a தமிழ் பேசும் indian” என்ற வாசகம் அமைந்துள்ள டிசர்ட்டை அணிந்துள்ளது இளைஞர்களை ஈர்த்துள்ளது.

 image

இந்தி திணிப்புக்கு எதிரான டிசர்ட் போட்டோவை யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருடன் அருகில் இருக்கும் நடிகர் ’மெட்ரோ’ ஹீரோ ஷிரிஷ் ‘இந்தி தெரியாது poda’ என்ற டிசர்ட்டை அணிந்திருக்கிறார். மேலும் சில இந்திக்கு திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்