புதுச்சேரி: ஏலச் சீட்டு நடத்தி ரூ.1.31 கோடி மோசடி - ஆடம்பரமாக வாழ்ந்த தம்பதியர் கைது

புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி ரூ.1 கோடியே 31 லட்சம் பணம் மோசடியில் ஈடுப்பட்ட தம்பதியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Couple arrested
Couple arrestedpt desk

செய்தியாளர்: ரகுமான்

புதுச்சேரி ஆலங்குப்பம் சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் கந்தன் (50), விவசாயியான இவர், அதே பகுதியில் மர பட்டறை நடத்தி வரும் கோபி என்ற ரத்தினம் மற்றும் அவரது மனைவி வனிதா ஆகியோரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு 20 மாத காலம் கொண்ட 3 லட்சம் ரூபாய் ஏலச் சீட்டில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மாதந்தோறும் சீட்டுத் தொகையை கட்டி வந்த நிலையில், சீட்டு முடிவடைந்தும் கோபி பணம் தராமல் இருந்துள்ளார்.

Arrested
Arrestedpt desk

இது தொடர்பாக பலமுறை கோபியிடம் கேட்டும் கந்தன் ஒருவருட காலமாக காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த கந்தன், இது தொடர்பாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கந்தனை போல 110 பேர் அவரிடம் பணம் கொடுத்தது தெரியவந்துள்ளது. மொத்தம் அவர்கள் அனைவரும் சேர்ந்து ரூ.1 கோடியே 31 லட்சம் பணத்தை ஏமாந்துள்ளது தெரியவந்தது.

Couple arrested
சென்னை: போலி நிறுவனம் மூலம் ரூ.1.57 கோடி மோசடி - வங்கி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது

இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரிடமும் புகாரை பெற்ற போலீசார், கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியுடன் சேர்ந்து ஏலச் சீட்டு நடத்தி வந்ததும். சீட்டு பணத்தில், கார் வீடு என ஆடம்பரமாக வாழந்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது மனைவி வனிதாவையும் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com