Published : 31,Aug 2020 01:02 PM
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் - முதல்வர் கடிதம்

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வழியில் நடைபெற்றது. அப்போது, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் குறைந்ததால் மாநிலங்கள் சந்தித்துள்ள இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்த 2 புதிய சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்தது.
அதன்படி ரிசா்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு அமல்படுத்தும் முதலாவது திட்டத்தின் கீழ் மாநிலங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ. 97,000 கோடி வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவது திட்டப்படி, மாநிலங்கள் சந்திக்கவுள்ள சரக்கு-சேவை வரி வருவாய் பற்றாக்குறையான ரூ. 2.35 லட்சம் கோடியையும் ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த கடன் திட்டங்களுக்கு கேரளம், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களும், புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை முழுவதுமான வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.