Published : 01,Jul 2017 02:31 AM

ஜி.எஸ்.டி அமல்: பட்டாசு வெடித்து பா.ஜ.க. கொண்டாட்டம்

bjp-celebrate-gst

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நள்ளிரவில் அமலாக்கப்பட்டதை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

டெல்லி இந்தியா கேட் பகுதியில் பாரதிய ஜனதா இளைஞர் பிரிவினர் பெருந்திரளாக திரண்டு ஆடி பாடி கொண்டாடினர். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மேள தாளங்கள் முழங்கி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். லக்னோவில் வெடி வெடித்து பாரதிய ஜனதாவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலிலும் பாரதிய ஜனதா தொண்டர்கள் ஆடி, பாடி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதேபோன்று, ராஜாஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மும்பை போன்ற நாட்டின் பிற பகுதிகளிலும் பாரதிய ஜனதா தொண்டர்கள் ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டதை வெடி வெடித்து கொண்டாடினர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்