[X] Close

துப்பாக்கி-2க்கு பிளான் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்.. ‘நோ’ சொன்ன விஜய்?

சினிமா

a-r-murugadoss

தளபதி 65, துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று ஏ.ஆர் முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், ஜெயராம், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் துப்பாக்கி. ஜெகதீஷ் என்ற கதாப்பாத்திரத்தில் ராணுவ வீரராக வரும் விஜய் மும்பையில் நடக்கும் பயங்கரவாத செயல்களை முறியடிப்பார். காட்சிகள் மும்பையில் நடப்பதுபோல் இருந்தாலும் தமிழகத்தில் பெரும் வசூலைக் குவித்தது துப்பாக்கி. ஹாரீஸ் ஜெயராஜ் இசையும் ஹிட் அடிக்கவே பாடல்களை ‘கூகிள் கூகிள்’ பண்ணிப்பார்த்தார்கள் இளைஞர்கள். 

image


Advertisement

துப்பாக்கி

     தற்போது நடிகர் விஜய் மாநகரம், கைதி படங்களின் மூலம் ஹிட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்துவிட்ட நிலையில் கொரோனா முடிந்ததும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில்தான், விஜய்யின் 65 வது படத்தை இயக்கப்போவது யார் என்ற யூகங்களும் எதிர்பார்ப்புகளும் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டன.

image

மாதவனின் ’இறுதிச்சுற்று’… சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அதெல்லாம் இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்தது சன் பிக்சர் நிறுவனம். விஜய்யின் 65 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர் முருகதாஸ் இயக்க ஒப்பந்தமும் போடப்பட்டது. கூட்டணி முடிவானாலும் என்ன கதையாக இருக்கும் என்று கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் குழப்பத்தை விட குழப்பிக்கொண்டார்கள் விஜய் ரசிகர்கள்.

image

கத்தி

இந்நிலையில்தான், துப்பாக்கி 2 படம் வெளியாகப்போகிறது என்றும் அந்தத் தலைப்பை தயாரிப்பாளர் தாணு மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதற்கெல்லாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முருகதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில் அவர், ’ஒரு படத்தின் தொடர்ச்சி என்பது மீண்டும் ஒரு வட்டத்துக்குள் அடைப்பது போன்றதுதான். தயாரிப்பாளர் தாணு தலைப்பை மறுத்துவிட்டதாக வரும் செய்திகள் பொய். விஜய் 65 என்ன மாதிரியான படம் என்பது தயாரிப்பு நிறுவனத்தால் விரைவில் வெளியாகும்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி-2 எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் இரண்டாம் பாகம் வேண்டும் என்றும் புதிய கதையை தயார் செய்யுமாறு விஜய் திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

image

சர்கார்

 விஜய் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் ஏற்கனவே, துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்கள் வெளியானது. நான்காவது முறையாக இணைந்திருப்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆனால், கடந்த வருடம் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ’தர்பார்’ படம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால், விஜய்யின் இந்த புதிய படமும் வெற்றிபெறுமா? என்பது சந்தேகம்தான் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சினிமா விமர்சகர்கள்.  

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close