[X] Close

மும்பையில் கனமழை: சாலைகளில் வெள்ளம்

Heavy-rain-at-Mumbai

மும்பையில் பெய்துவரும் கன மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


Advertisement

மகாராஷ்ட்ராவில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மும்பைக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் ஏரிகளும் நிரம்பி வருகின்றன. பருவமழை தீவிரமடைவதால் ஏரிகளில் நீர் மட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
காட்கோபர், சயான், குர்லா, பரேல், நவி மும்பை பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மழை காரணமாக ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.

மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாமில் ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மத்திய பிரதேசத்தில் இடி தாக்கி 5 பேர் உயிரிழந்தனர். அடுத்த 3 தினங்களில் டெல்லியில் கனமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close