Published : 27,Jun 2017 04:54 AM

கணவனுடன் பிரச்னை: பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்

Wife-suicides-along-with-children

கணவன் திட்டியதால் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை  ஏற்ப்படுத்தியுள்ளது.

பழனி பத்திரா தெரு பகுதியில் வசித்து வருபவர் சோனைமுத்து. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு தன்னாசி, முத்து என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சோனைமுத்து மது போதையில் அடிக்கடி மனைவி சித்ராவிடம் தகராரில் ஈடுபட்டு வந்தள்ளார். நேற்றும், வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த சோனைமுத்து மனைவி சித்ராவை தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டதால் சித்ரா மனம் உடைந்தார்.

இதனால் வாழ்க்கை வேண்டாம் என முடிவு செய்த சித்ரா, உணவில் விஷம் கலந்து அதனை தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் தானும் அந்த விஷம் கலந்த உணவை அருந்தியுள்ளார். இதனால் மூவரும் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளனர். இதனைப்பார்த்த பார்த்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மூவரும் உயிர் தப்பினர். தற்கொலைக்கு பழனியில் பெற்ற தாயே குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்