ஒரு நொடி | ரத்னம் | TILLU Square | BeeKeeper
ஒரு நொடி | ரத்னம் | TILLU Square | BeeKeepercanva

ஒரு நொடி | ரத்னம் | TILLU Square | BeeKeeper.. இந்த வார தியேட்டர் OTT லிஸ்ட் இதோ.!

ஒரு நொடி | ரத்னம் | TILLU Square | BeeKeeper.. இந்த வார தியேட்டர் OTT லிஸ்ட் இதோ.!

1. The Big Door Prize: S2 (English) Apple TV - Apr 24

The Big Door Prize: S2
The Big Door Prize: S2Apple TV

M.O. Walsh எழுதிய `The Big Door Prize’ புத்தகம் அதே பெயரில் சீரிஸாக உருவாகியுள்ளது. Deerfield என்ற நகரத்து மக்கள், மளிகைக்கடை ஒன்றில் எதிர்காலத்தைக் கூறும் மிஷின் ஒன்று இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள் அதன் பின் நடப்பவையே முதல் சீசனின் கதை. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் சீசன் வெளியாகிறது.

2. Ranneeti: Balakot & Beyond (Hindi) Jio Cinema - Apr 25

Ranneeti: Balakot & Beyond
Ranneeti: Balakot & BeyondJio Cinema

Santosh Singh இயக்கியிருக்கும் சீர்ஸ் `Ranneeti: Balakot & Beyond’. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களைத் தழுவிய சீரிஸாக உருவாகியிருக்கிறது.

3. Dil Dosti Dilemma (Hindi) Prime - Apr 25

Dil Dosti Dilemma
Dil Dosti DilemmaPrime

Debbie Rao இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Dil Dosti Dilemma'. அஸ்மாரா குடும்பத்தின் வற்புறுத்தலால், தனது பாட்டி வீட்டிற்கு செல்கிறாள். அங்கு அவள் கற்கும் வாழ்க்கைப் பாடங்கள் என்ன என்பதே கதை.

4. Dead Boy Detectives (English) Netflix - Apr 26

Dead Boy Detectives
Dead Boy DetectivesNetflix

டிசி காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் சீரிஸ் `Dead Boy Detectives'. Charles Rowland மற்றும் Edwin Paine அமானுஷ்ய விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் குற்றங்களை விசாரித்து விடை கண்டுபிடிப்பதை வேலையாக செய்கிறார்கள். அதில் அவர்களுக்கு வரும் பிரச்சனையே கதை.

5. Veppam Kulir Mazhai (Tamil) Aha - 23

Veppam Kulir Mazhai
Veppam Kulir MazhaiAha

பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவான படம் `வெப்பம் குளிர் மழை’. கணவன், மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் அவர்களது குடும்பத்தில். ஆனால் குழந்தை பிறந்த பின்பு அவர்களுக்குள்ளேயே ஒரு பிரச்சனை. அது எப்படி தீர்ந்தது என்பதே கதை.

6. Bhimaa (Telugu) Hotstar - Apr 25

Bhimaa
BhimaaHotstar

கன்னட இயக்குநர் ஹர்ஷா தெலுங்கில், கோபிசந்த் நடிப்பில் இயக்கிய படம் `Bhimaa’. வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு கோவிலில் சில மர்மமான விஷயங்கள் நடக்கிறது. அதை விசரிக்க வரும் காவலதிகாரி என்ன மர்மம் என கண்டுபிடித்தாரா? என்பதே கதை.

7. Idi Minnal Kadhal (Tamil) Aha - 26

Idi Minnal Kadhal
Idi Minnal Kadhal Aha

பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவான படம் `இடி மின்னல் காதல்'. ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் விபத்தும் அதைத் தொடர்ந்து வரும் சிக்கல்களுமே கதை.

8. Tillu Square (Telugu) Netflix - Apr 26

Tillu Square
Tillu SquareNetflix

2022ல் விமல் இயக்கி பெரிய ஹிட்டான படம் `DJ Tillu'. அதன் தொடர்ச்சியாக மாலிக் ராம் இயக்கிய படம் `Tillu Square'. இந்த முறை டில்லு என்ற இளைஞன் சிக்கிக் கொள்ளும் புதிய பிரச்சனையும் அதை சுற்றி நடக்கும் காமெடிகளுமே கதை.

9. Crakk (Hindi) Hotstar - Apr 26

Crakk
Crakk

ஆதித்யா தத் இயக்கத்தில் வித்யுத் ஜம்வால், அர்ஜூன் ராம்பால், எமி ஜாக்சன் நடித்த படம் `Crakk’. சித்தார்த் என்ற இளைஞன், மிக ஆபத்துகள் நிறைந்த போட்டி ஒன்றில் கலந்து கொள்கிறான். அதில் அவர் வென்றாரா இல்லையா என்பதே கதை.

10. The Beekeeper (English) Lionsgate - Apr 26

The Beekeeper
The Beekeeper

Suicide Squad, Fury போன்ற படங்களின் இயக்குநர் David Ayer இயக்கத்தில் Jason Statham நடித்த படம் `The Beekeeper'. தன்னுடைய பகைக்காக, பழிவாங்குப் படலத்தை துவங்குகிறார் ஹீரோ. அது எவ்வளவு பெரிய அதிர்வுகளை உண்டாக்குகிறது என்பதே படம்.

11. Rathnam (Tamil) - Apr 26

Rathnam
Rathnam

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் `ரத்னம்’. அடிதடிகள் செய்யும் ஹீரோ, ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கும் போது என்ன ஆகிறது என்பதே கதை.

12. Oru Nodi (Tamil) - Apr 26

Oru Nodi
Oru Nodi

மணிவர்மன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ஒரு நொடி’. ஒரு போலீஸ் அதிகாரி விசாரிக்கும் வழக்கும், விசாரனையில் அவர் கண்டுபிடிக்கும் உண்மைகளுமே கதை.

13. Pavi Caretaker (Malayalam) - Apr 26

Pavi Caretaker
Pavi Caretaker

திலீப் நடித்துள்ள படம் `Pavi Caretaker'. பவி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கேர் டேக்கர், அவருக்கு அமையும் ஒரு துணை மூலம் பவியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே கதை.

14. Ruslaan (Hindi) - Apr 26

Ruslaan
Ruslaan

Aayush Sharma நடித்திருக்கும் படம் `Ruslaan’. ரஸ்லன் ஒரு மிஷனுக்கு செல்கிறார், அது என்ன? வெற்றிகரமாக முடித்தாரா என்பதே கதை.

15. Challengers (English) - Apr 26

Challengers
Challengers

Call Me by Your Name, Bones and All போன்ற படங்களின் இயக்குநர் Luca Guadagnino தற்போது இயக்கியுள்ள படம் `Challengers’. டென்னிஷ் கோச்சான தஷி, தனது கணவரின் டென்னிஷ் திறமையை மீட்டுக் கொண்டுவர செய்யும் செயல்கள் என்ன என்பதே கதை.

16. Abigail (English) - Apr 26

Abigail
Abigail

1936ம் ஆண்டு வெளியான `Dracula's Daughter’ படத்தின் ரீ இமேஜின் வெர்ஷன் தான் `Abigail’. Ready or Not, Scream VI போன்ற ஸ்லாஷர் த்ரில்லர் படங்களை இயக்கிய Matt Bettinelli-Olpin மற்றும் Tyler Gillett இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. அண்டர்வேல்ட் கிங்பின் ஒருவரின் மகளை கடத்தி தனிமையான இடத்தில் அடைத்து வைக்கிறார்கள். ஆனால் அந்த சிறுமியின் உண்மையான குணம் வெளிப்பட்ட பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

17. Late Night with the Devil (English) - Apr 26

Late Night with the Devil
Late Night with the Devil

Colin Cairnes Cameron Cairnes இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Late Night with the Devil'. 1977ல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிகழும் ஒரு சம்பவத்தை மையப்படுத்திய த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

18. Ghostbusters: Frozen Empire (English) - Apr 26

Ghostbusters: Frozen Empire
Ghostbusters: Frozen Empire

Ghostbusters பட வரிசையில் ஐந்தாவது படமாக உருவாகியிருக்கிறது `Ghostbusters: Frozen Empire’. ஒரு பழைமையான விமானத்தில் இருந்து கிளம்பும் தீய சக்திகளை வேட்டையாட செல்கிறது Ghostbusters குழு. அவர்கள் ஜெயித்தார்களா என்பதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com