Published : 06,Aug 2020 03:32 PM

"தோனி எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்தார்" மனம் திறந்த இஷாந்த் சர்மா !

Ishant-Sharma-reveals-how-former-India-captain-backed-him

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்தார் என்று வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

"ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ" இணையதளத்துக்கு பேட்டியளித்த இஷாந்த் சர்மா பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் அதில் "நான் 50 முதல் 60 டெஸ்ட் போட்டிகள் விளையாடி முடித்த பின்பும் கூட தோனி என் இடத்துக்கு வேறொரு வீரர் குறித்து யோசித்ததில்லை. இப்போதும் கூட நான் 97 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய பின்பும் கூட தோனி யோசிக்கவில்லை. அவர் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்தார்" என்றார்.

image

மேலும் தொடர்ந்த அவர் "இத்தனை டெஸ்ட் போட்டிகளுக்கு பின்பும் கூட ஆவரேஜ், ஸ்ட்ரைக் ரேட் பற்றியெல்லாம் கவலைப்படுகிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை. இவையெல்லாம் வெறும் எண்ணிக்கைதான். நான் இந்தியாவுக்காக விளையாடும்போது கேப்டன் என்ன சொல்கிறாரோ அப்படி பந்துவீசுவேன். 20 ஓவர்கள் பந்துவீசி 40 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இருக்கிறேன்" என்றார் இஷாந்த் சர்மா.

image

இறுதியாக பேசிய இஷாந்த் சர்மா "என்னுடைய பவுலிங் சராசரி 37 இருப்பதை பற்றி நான் கவலைப்பட்டதில்லை. என்னுடைய தொடர்பு கேப்டனிடம் சரியாக இருக்கும். அதனால்தான் தோனி எனக்கு உறுதுணையாக இருந்தார்" என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்