Published : 26,Jun 2017 06:19 AM

அப்பா வருவாரா, மாட்டாரா? என்ன சொல்கிறார் சவுந்தர்யா ரஜினி?

Soundarya-Rajinikanth-explains-about-Rajinikanth-speech-on-entry-to-politics

ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்றும் அவரது பிறந்த நாளன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அவரும், வரும்போது அறிவிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்பாவின் அரசியல் பிரவேசம் பற்றி, அவர் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் என்ன சொல்கிறார்?

‘அப்பா என்ன முடிவெடுத்தாலும் குடும்பம் அவருக்குப் பின்னால் நிற்கும். அரசியல் பற்றி அவர் என்ன சொல்ல நினைக்கிறாரோ, அதை அவர்தான் சொல்ல வேண்டும். அவருடன் எல்லா விஷயங்களையும் நாங்கள் விவாதிப்போம். அரசியல் விஷயம் உட்பட. அவர் என்ன முடிவெடுத்தாலும் எங்கள் ஆதரவு அவருக்கு உண்டு. அவரது அரசியல் விஷயம் பற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது’ என்று கூறியிருக்கிறார் சவுந்தர்யா ரஜினி.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்