Published : 25,Jun 2017 01:39 PM

தீபா பேனர்களை அகற்ற முயன்ற டிராபிக் ராமசாமி

Traffic-Ramasamy-removes-Deepa-banner

 

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான தீபாவின் வீடு தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ளது. தீபா  வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்தனர். தற்போது தீபா வீட்டு எதிரே பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சாலையில் ஆங்காங்கே பேனர்களை வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தி.நகர் சிவஞானம் தெருவில் தீபா வீட்டு முன்பு உள்ள பேனர்களால் பொதுமக்களுககு இடையூறு ஏற்படுகிறது என்று கூறி அதை அகற்ற முயற்சித்தார். அதுபற்றி தகவல் அறிந்ததும் தீபா ஆதரவாளர்கள் அங்கு வந்து டிராபிக் ராமசாமியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் அங்கு சென்று தீபா ஆதரவாளர்களை சமாதானம் செய்தனர். இதுகுறித்து போலீசார் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

இன்று மாநகராட்சி அதிகாரிகள் தி.நகர் திருஞானம் தெருவில் இருந்து பேனர்களை அகற்றினர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்