கடந்தவாரம், ஆந்திராவில் வயலில் உழுவதற்கு டிராக்டர் இல்லாததால் தனது இரண்டு மகள்களுக்கும் மாடுகளுக்கு ஏர் பூட்டுவதுபோல் பூட்டி உழவு செய்த விவசாயியின் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரண்டு இளம் பெண்களும் கொளுத்தும் வெய்யிலில் கலப்பையை பூட்டிக்கொண்டு உழுத வீடியோ கலங்காதவர்களையும் கண் கலங்க வைத்தது. இதனைப் பார்த்த நடிகர் சோனு சூட், அக்குடும்பத்திற்கு உடனே ட்ராக்டர் ஒன்றை வாங்கிக்கொடுத்தார். இது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பாராட்டுக்களைக் குவித்தது.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இரண்டு பெண்களின் படிப்புச் செலவையும் ஏற்றுகொள்வதாக அறிவித்திருந்தார். ஆனால், சோனுசூட்டிடம் உதவி பெற்ற நாகேஸ்வர ராவ் குடும்பத்தினர் உணமையிலேயே ஏழைகள்தானா? என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், ஆந்திராவின் வருவாய்த்துறை அதிகாரிகள் நாகேஸ்வர ராவின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்து, அவர்களிடம் சொத்துக்கள் ஏதாவது இருக்கிறதா? என்று ஆயுவு செய்துள்ளனர். நாகேஸ்வர ராவ் டீக்கடை வைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். கொரோனாவால் ஊரடங்கு போடவே டீக்கடையை மூடி வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்துள்ளது, அவரது குடும்பம்.
அதனால், தனது சிறிய நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தபோது வாடகைக்குக் கூட டிராக்டரையோ, மாடுகளையோ வாங்கி உழவு செய்ய முடியாத நிலையில் வறுமை அவர்களை வாட்டியிருக்கிறது. இந்நிலையில்தான் மகள்களைக்கொண்டு உழுதிருக்கிறார்.
இதுகுறித்து நாகேஸ்வர ராவ் கூறும்போது, எங்கள் உறவினர்கள் அந்த வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்கள். ஒரு நன்மையையும் பெறுவதற்காக அவர்கள் பதிவிடவில்லை. மேலும், எனது மகள்களை மருத்துவம் படிக்க வைக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் என்று கூறியதையும் தவறாக நினைத்துக் கொண்டார்கள். நான் ஒரு சமூக ஆர்வலர். பட்டியலினத்தைச் சேர்ந்த எங்களுக்கு ஏழையாக இருந்தாலும் மகள்களை மருத்துவம் படிக்க வைக்கவேண்டும் என்ற ஆசை இருக்கக்கூடாதா? நான் பட்டியலினத்தவராக இல்லாதிருந்து ஒரு பணக்காரராக இருந்திருந்தால் வருவாய் துறையினர் இப்படி வந்து விசாரித்திருப்பார்களா?” என்று வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!