டபிள்யூடபிள்யூஇ (WWE) எனப்படும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி பெறுகிறார்.
முன்னாள் பளுதூக்கு வீராங்கனையான கவிதா தேவி, துபாயில் அடுத்தமாதம் நடைபெறும் பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் போட்டியில் பங்கேற்பதை WWE நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதற்காக கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட முதற்கட்ட போட்டியில் அவர் பங்கேற்றார். அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நடுவர்களின் நன்மதிப்பைப் பெற்ற கவிதா, பெண்களுக்கென பிரத்யேகமாக நடத்தப்படும் துபாய் ட்ரை அவுட் தொடரின் ’Mae Young’ பிரிவில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார். WWE போட்டியில் ஏற்கனவே பங்கேற்றுள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரேட் காளியின் பயிற்சி மையத்தில் கவிதா பயிற்சி பெற்றவர். அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்தாண்டு நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற கவிதா, அந்த போட்டியில் தங்க பதக்கத்தை வென்றார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்