[X] Close

தமிழக எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு ஸ்டாலின் முக்கிய கோரிக்கை

MK-Stalin-request-to-TN-MLAs-and-MPs

தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமாருக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த அவர் பொதுவேட்பாளர் என பாரதிய ஜனதா சொன்னது வெறும் பேச்சுக்காகத்தான் என கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற மீராகுமாரை வாழ்த்துவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவு அளிக்கப்படும் என அதிமுக-வின் இரு அணிகளும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close