Published : 04,Jul 2020 06:19 PM

3வது நாளாக இன்றும் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு - ஒரேநாளில் 65 பேர் உயிரிழப்பு

corona-update-tamilnadu-today

தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், 3 ஆவது நாளாக ஒரேநாளில் 4000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 1,07,001 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 2,082 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,842 பேருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,214 பேர் மீண்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 60,592 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 60, 000-ஐ கடந்ததுள்ளது. தமிழகத்தில் மேலும் 65 பேர் கொரோனா காரணமாக மரணிக்க நேரிட்டுள்ளது. கொரோனா காரணமாக இதுவரை மொத்தம் 1450 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா உயிரிழப்பு 1500-ஐ நெருங்கியுள்ளது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்