[X] Close

யோகாவால் எடை குறைந்த அமித்ஷா

Amit-Shah-lost-20-kgs-thanks-to-yoga

யோகா பயிற்சிகளை மேற்கொண்டதால், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தனது உடல் எடையில் 20 கிலோ குறைத்துள்ளதாக ராம்தேவ் தெரிவித்துள்ளார். 

3வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அகமதாபாத்தில் பாபா ராம்தேவ் தலைமையில் இன்று சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அமித்ஷா உள்பட பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டனர். இதனிடையே, யோகா முகாமில் பங்கேற்ற ராம்தேவ், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தொடர்ந்து யோகா பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என்றும், இதன் மூலம் அவரது உடல் எடையில், 20 கிலோ வரை அமித்ஷா குறைத்துள்ளதாகவும் ராம்தேவ் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close