ஈரோடு: தங்க நகைகளுடன் சாலையில் கவிழ்ந்த வாகனம் - எத்தனை கிலோ நகைகள் தெரியுமா?

ஈரோடு அருகே தங்க நகைகளை ஏற்றிச் சென்ற தனியார் நிறுவன வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Gold with vehicle
Gold with vehiclept desk

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் சித்தோடு, கோவை - சேலம் நெடுஞ்சாலை வழியாக கோவையில் இருந்து செலத்திற்கு சுமார் 666 கோடி மதிப்புள்ள 810 கிலோ தங்க நகைகளை தனியார் நிறுவன வாகனத்தில் கொண்டு சென்றனர். இன்று அதிகாலை சித்தோடு அடுத்த சமத்துவபுரம் பகுதியில் சென்ற போது, ஓட்டுனர் சசிகுமாரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் சசிகுமார் மற்றும் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயமடைந்தனர்.

Police station
Police stationpt desk
Gold with vehicle
ஜார்க்கண்ட் | அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர், காயமடைந்த இருவரையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்திற்குள்ளான வாகனத்தை மீட்டு சித்தோடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஆவணங்களை சரிபார்த்தனர்.

இதைத் தொடர்ந்து தனியார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தினரை வரவழைத்து துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் வேறு வாகனத்தில் நகைகளை மாற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com