“தலித் மக்கள் மீதே போலீஸ் தாக்குதல்; மருத்துமுகாம்கூட நடத்தல” - சேலம் தீவட்டிப்பட்டியில் நடந்ததென்ன?

தீவட்டிப்பட்டி கலவரம் நடந்து கிட்டத்தட்ட 5 நாட்கள் ஆகும் நிலையில் இன்னும் மருத்துவமுகாம் கூட நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீவட்டிப்பட்டி
தீவட்டிப்பட்டிpt web

தீவட்டிப்பட்டி

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்தில் உள்ளது தீவட்டிப்பட்டி கிராமம். இங்கு ஏறத்தாழ 500 குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தின் அருகில் உள்ள நாச்சினம்பட்டி கிராமத்தில் 200 பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், தீவட்டிபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவியது. மாரியம்மன் கோவில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவிழாவில் நடந்த வாக்குவாதம்

மே 1 ஆம் தேதி இந்தாண்டிற்கான திருவிழா தொடங்கியது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் இந்த திருவிழா ஒரு வாரத்திற்கு நடைபெறும்.

இந்நிலையில், கோவிலில் வழிபடுவது தொடர்பாக ஆதிக்க சாதியினருக்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம்சாட்டிய நிலையில், அரசு இருதரப்பையும் மே 2 ஆம் தேதி சமாதானப் படுத்த முயற்சித்தது. அன்று மதியமே இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு கலவரமாக மாறியுள்ளது. கடைகள், வாகனங்கள் போன்ற அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. பதற்றமான சூழலில் காவல்துறை தடியடி நடத்தி கவலவரத்தை கட்டுக்கொண்டு வந்தது.

தீவட்டிப்பட்டி
பிறப்புறுப்பில் தாக்கிய பந்து.. சுருண்டு விழுந்த சிறுவன் பலி.. மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சோகம் #Video

அறநிலையத்துறை கோவிலுக்குள் செல்ல அனுமதி வேண்டுமா?

இந்நிலையில், சிசிடிவி காட்சிகள், வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் போன்றவற்றைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி பலரைக் கைது செய்துள்ளது. கிராமத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் செல்வனை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “1 ஆம் தேதி இரவு மக்கள் வழிபாட்டிற்காக செல்லும்போது அங்கு வாய்த்தகராறு நடக்கிறது. பின்னர் காவல்துறை வந்து சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தலாம் என சொல்கிறார்கள். அரசு முதலிலேயே கோவிலுக்குள் அழைத்து சென்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில். கோவிலுக்குள் யாரையேனும் அனுமதிக்கவில்லை என்றால் அவர் மேல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் தானே. அதைவிடுத்து ஏன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் எல்லோர் முன்னிலையிலும், உங்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வதே வன்முறை தானே. இதில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு சென்ற பின் இரு நாட்கள் கால அவகாசம் கேட்கிறார்கள். அதற்கு தலித் மக்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பேச்சுவார்த்தைக்குப் பின் அனைவரும் கலைந்து வந்த பின்பே அருண்குமார் தாக்கப்படுகிறார். இதற்குப் பின்பே மறியல் நடந்தது. அப்போதுதான் கல்வீச்சு நடந்தது. அதன்பின்னர் காவல்துறையினரின் தாக்குதலால் தான் பட்டியலின மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். கை, கால்கள் எல்லாம் சிலருக்கு உடைந்துள்ளது.

தீவட்டிப்பட்டி
டெல்லி தீ விபத்து: பெரும் பொருட்சேதம்; நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை

மருத்துவமுகாம் கூட நடத்தப்படவில்லை

பாதிக்கப்பட்ட மக்கள் லோக்கலிலேயே தனியார் மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவனைக்கு பெரும்பாலும் செல்லவில்லை. காவல்துறையினர் அடித்துதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மூன்று பேருக்கு மண்டையில் பலத்த காயம்.

அரசாங்கத்தில் இருந்து இதுவரை யாரும் வரவில்லை. இதுபோன்ற நேரத்தில் மாவட்ட ஆட்சியரும் எஸ்பியும் உடனடியாக வரவேண்டும் என வன்கொடுமை தடுப்புச் சட்டம் சொல்கிறது. எஸ்பி வருகிறார்; ஆனால் தலித் மக்கள் மீதே தாக்குதல் நடத்தினார். மாவட்ட ஆட்சியர் வரவில்லை. கோவில் தற்போதுவரை மூடிதான் வைத்துள்ளனர்.

பட்டியலின மக்களிடம் பாதி வரி, நன்கொடை வாங்குவார்கள் எனும்போது, அப்படி இருக்கும்போது புதிதாக உரிமை கொண்டாடுகிறார்கள் என்று சொல்வது என்ன நியாயம். ஐந்து நாட்களாக யாரும் வேலைக்குப் போகாமல் எல்லோரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனால் பொருளாதார வசதி இல்லாத மக்கள் மூன்று நான்கு நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருக்கிறார்கள். அரசு எதாவது நிவாரண உதவி செய்துகொடுத்துள்ளதா என்றால் எதுவும் இல்லை. முதலில் மருத்துவமுகாம் நடத்த வேண்டும். பெண்கள் எல்லாம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். 19 பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் உள்ளனர். அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தீவட்டிப்பட்டி
குமரி: திருமணத்திற்கு வந்த இடத்தில் கடலில் குளிக்கச் சென்ற 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com