இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தோனி மற்றும் யுவராஜின் நிலை குறித்து பிசிசிஐ நிர்வாகம் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரரும், ஜூனியர் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்துகொண்ட இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4ஆவது மற்றும் 5ஆவது வீரராக முறையே யுவராஜ் மற்றும் தோனி இடம்பெற்றிருந்தனர். பாகிஸ்தான் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால் சீனியர் வீரர்களான தோனி மற்றும் யுவராஜ் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடர் வர இருக்கிறது. அதற்காக வலுவான இந்திய அணியை கட்டமைக்கும் பொருட்டு மூத்த வீரர்களான தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரின் நிலை குறித்து பிசிசிஐ நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். இந்திய அணியில் அடுத்த 2 ஆண்டுகளில் இவர்களின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது என்பதை பிசிசிஐ நிர்வாகம் முடிவெடுக்க இதுவே சரியான தருணம். எதிர்காலத்தில் நடைபெறும் தொடர்களில் அவர்களைத் தேர்வு செய்யும் விவகாரத்தினை தேர்வுக்குழுவைச் சேர்ந்தவர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்