வெகுநாள் கழித்து வீட்டிற்கு திரும்பிய கணவனை, கொரோனாவை காரணம் காட்டி மனைவி வீட்டிற்குள் அனுமதிக்காதச் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு காசநோயால் பாதிக்கப்பட்ட பாவா(46) என்பவர் குடும்பத்தை விட்டு பிரிந்து திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது அவர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் சாலையில் ஆதரவற்று நின்ற அவரை மீட்ட சில சமூக ஆர்வலர்கள் அவருடைய முகவரியை கேட்டு திருச்சி, துவாக்குடி மலை, மகாத்மா காந்தி தெருவில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்றிரவு விட்டுச் சென்றனர்.
ஆனால் அவரது மனைவி, காசநோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய கணவன் உடல் மேலும் மெலிந்து, மிகவும் சோர்வுடன் காணப்பட்டதை பார்த்தவுடன் ஒருவேளை அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள் அனுமதிக்காமல் வாசலிலேயே அமர வைத்து விட்டார். இரவு 12 மணி ஆகியும் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காததால், அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!