Published : 19,Jun 2017 12:21 PM
தானா சேர்ந்த கூட்டம்.. அசத்துவாரா அனிருத்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’தானா சேர்ந்த கூட்டம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அடுத்த மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்பட இருக்கிறது
இதுகுறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தந்தை மகன் உறவைச் சொல்லும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை முதல் வாரத்தில் வெளியாக இருக்கிறது’ எனத் தெரிவித்து உள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ படம் சூப்பர் ஹிட்டடித்ததால் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், செந்தில், சத்யன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். சமீபத்தில் நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில் இணைத்துள்ளார். அனிருத் இந்தப்படத்திற்காக 8 பாடல்களை கம்போஸ் செய்திருக்கிறாராம். ’நானும் ரவுடிதான்’ பட இசையைப்போல இந்தப்படத்தின் பாடல்களிலும் அசத்துவாரா அனிருத் என எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.