[X] Close

மே 20 முதல் தொடங்கப்படுகின்றனவா போக்குவரத்து சேவைகள்?

இந்தியா

Transportation-to-begin-from-May-20-says-sources

பொது முடக்கம் முடிந்த பிறகு சாலை, ரயில், விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அனுமதியை படிப்படியாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது முடக்கம் வரும் 17 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் 20ஆம் தேதி முதல் சாலை, ரயில், விமான போக்குவரத்தை அரசு படிப்படியாக தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்ற பொது இடங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

image


Advertisement

இவற்றுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்குவது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பிரதமர் மோடி கடந்த சில நாட்களில் ஆறு முறை பேசியுள்ளார். இதில் தொழில் துறையை மீட்டெடுக்க பல ஊக்க சலுகைகள் அறிவிக்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

image

இத்திட்டங்களுக்கு அதிகாரிகள் இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் உள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 24ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபின் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்க சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது. பாதிப்புகளின் அளவை ஒப்பிடும்போது ஊக்க சலுகைகள் போதாது என முறையீடுகள் எழுந்தன. இந்நிலையில் மீண்டும் ஒரு ஊக்க சலுகை திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close