Published : 04,May 2020 07:04 AM

"டெல்லியை திறக்கும் நேரம் வந்துவிட்டது" - அரவிந்த் கெஜ்ரிவால்

Arvind-Kejriwal-Time-to-reopen-Delhi-be-ready-to-live-with-corona-virus

டெல்லியை திறக்கும் நேரம் வந்துவிட்டது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மட்டுமே சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஒட்டு மொத்தமான மாவட்டத்தையும் அறிவிக்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரைந்திருப்பதாகக் கூறினார்.

Kejriwal

போலி கஸ்டமர் கேர்: 2 மணி நேரத்தில் ரூ.2.25 லட்சம் இழந்த தொழிலதிபர்!!

கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது சாத்தியமில்லாதது என தெரிவித்துள்ள கெஜ்ரிவால், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளதாகக் கூறினார்.

டெல்லியை திறந்து விடும் நேரம் வந்துவிட்டது எனவும் கொரோனா வைரஸுடன் வாழ தயாராக வேண்டும் எண்றும் கூறினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மூவாயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், தற்போது 300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்