[X] Close

கஜூராகோ வளாகத்துக்குள் காமசூத்ரா: பஜ்ரங் சேனா எதிர்ப்பு!

Bajrang-Sena-people-oppose-selling-Kamasutra-book-inside-Khajuraho

கஜூராகோ கோயில் வளாகத்துக்குள் காமசூத்ரா புத்தகத்தை விற்கக் கூடாது என்று பஜ்ரங் சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திர பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் கஜூராகோ. பாலியல் சார்ந்த சிற்பங்களுக்காகவும் கட்டிட கலைக்காகவும் புகழ் பெயர் பெற்ற இந்த கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு காமசூத்ரா புத்தகங்கள் மற்றும் இந்த கோயிலில் இடம்பெற்று சிலைகளின் மாதிரிகள் கோயிலுக்கும் இருக்கும் கடைகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் பஜ்ரங் சேனா அமைப்பினர் போலீசிடம் புகார் கொடுத்துள்ளனர். 
இதுபற்றி அவர்கள் கொடுத்துள்ள புகார் மனுவில், ‘இந்த வரலாற்று சிறப்புமிக்க கோயிலுக்கு ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் வருகின்றனர். கோயிலுக்குள் காமசூத்திரா புத்தகங்கள் விற்படுகின்றன. சிற்பங்களில் உள்ள மாதிரி சிலைகளும் விற்கப்படுகின்றன. கோயிலின் உள்ளே இப்படி விற்கப்படுவது நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டுக்கு எதிரானது. கோயில் வளாகத்துக்குள்ளேயே இது போன்ற புத்தகங்களை விற்றால் வெளிநாட்டினர் மத்தியில் நமது மதிப்பு, மரியாதை பாதிக்கப்படும். அதனால் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close