கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தன்னலமின்றி போராடி வருபவர்களின் சேவை உணர்வை பாராட்டும் வகையில் தங்கத்தால் மாதிரிகளை வடிவமைத்துள்ளார் நகைத்தொழிலாளி ஒருவர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு நேற்றிலிருந்து ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வரலாம் என அறிவித்தாலும், தமிழக அரசு எந்த தளர்வுகளையும் அறிவிக்கவில்லை. கொரோனா வேகமாக பரவி வருவதால் காவலர்கள், மருத்துவர்களுடன் இணைந்து பொது மக்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா?
ஒரு மாதத்திற்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்திருந்தால்... அரசின் அதிரடி முடிவு
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த, நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் தேவன் என்பவர், கொரோனா பரவலை தடுக்க அல்லும் பகலும் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் சேவை உணர்வை போற்றும் விதமாக, தங்கத்தால் மாதிரிகளை வடிவமைத்துள்ளார், அதன்படி, ஸ்டெதஸ்கோப், முகக் கவசம், துடைப்பம், லத்தி ஆகியவற்றை தங்கத்தால் செதுக்கியுள்ளார். இதேப் போல, ரமலான் பண்டிகை வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியில் ஆன மசூதியையும் உருவாக்கியுள்ளார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி