Published : 15,Apr 2020 07:35 AM

சென்னையில் எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு?: பிரத்யேக செயலி வெளியிட்ட மாநகராட்சி

Chennai-corporation-introduced-new-mobile-app-to-find-corona-affected-area

சென்னையில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட 80 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள பிரத்யேக செயலி மூலம் அறிந்துகொள்ளலாம்.

 பொதுமக்கள் கொரோனா வைரஸ் நோய் தொடர்பான தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதியதாக Corona Monitoring செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

image

இதற்கிடையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் மண்டலத்தில் 26 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. திருவொற்றியூர் மண்டலத்தில் 6 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அண்ணாநகரில் 12 பகுதிகள், திருவிக நகர் மண்டலத்தில் 5 பகுதிகள், தேனாம்பேட்டையில் 8 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளின் எல்லைகளில் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் Corona Monitoring செயலியில் உள்ள வரைபடத்தில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பாதிப்புகள் இருக்கின்றன என்பதை பெரிதுபடுத்தி பார்க்கலாம்.

image

அதில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதி மஞ்சள் நிறத்தில் தெரியும். இதன்முலம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தை - காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்