பருவ மழை முற்றிலும் பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 20 அடி அதிகமாக 130.80 அடியாக இருந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மே மாதத்தில் பெய்ய வேண்டிய கோடை மழையில் இருந்து ஜூனில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை, நவம்பர், டிசம்பரில் பெய்ய வேண்டிய வட கிழக்கு பருவ மழை என “மும்மாரி”யும் பொய்த்தது.
இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது. மாறாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக இறங்கி, தற்போது 110 அடியாகியுள்ளது. அணைக்கு விநாடிக்கு வெறும் 16 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் தமிழக குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் 20 அடி அதிகமாக 130.80 அடியாக இருந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 317 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழக பாசனத்திற்கு விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்