[X] Close

‘வானத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து தூவுகிறார்கள்’ : வாட்ஸ் அப்பில் விநோத வதந்தி..!

இந்தியா,கொரோனா வைரஸ்

Fake-forward-whatsapp-message-claims-that-everyone-should-stay-indoors-at-night-as-the-government-is-spraying-medicine-over-the-city-to-kill-the-COVID-19

பெங்களூர் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக வானத்தில் இருந்து மருந்தினை தூவுகிறார்கள் என்பது போன்று வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவின.


Advertisement

கொரோனா வைரஸ் உலகினையே உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு உள்ள நாடுகள் முழுவீச்சில் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அரசாங்கங்களுக்கு சவால் விடும் வகையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் வதந்திகளை பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் வதந்திகள் பரவுவது நின்றபாடில்லை.

image


Advertisement

இந்நிலையில், பெங்களூரில் விநோதமான முறையில் கொரோனா தொடர்பாக வதந்தியை பரப்பி இருக்கிறார்கள். அதாவது, கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக கர்நாடக அரசு இரவில் வானில் இருந்து மருந்து தெளிக்கவுள்ளதாகவும், அதனால் பெங்களூர் நகரவாசிகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்ற தகவல்தான் பெங்களூரில் பலருக்கும் தீயாய் பரவியுள்ளது. அத்துடன், இந்தத் தகவலை நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலருக்கும் உடனடியாக ஷேர் செய்ய வேண்டும் என அந்த வாட்ஸ் அப் மெசேஜ்ஜில் தெரிவித்திருக்கிறார்கள்.


Advertisement

“எல்லாம் சரியாகிவிடும்” இத்தாலி மக்களுக்கு ஆறுதலளித்த ‘பிறந்த குழந்தை’ ! 


ஆனால், பெங்களூரு மாநகராட்சி சார்பில் இதுபோன்று எந்த செய்தி அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுமுற்றிலும் வதந்திதான். இது தவறான தகவல் என்பதை கர்நாடக சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ளது. ஆனால், வதந்தி என்பதை அறியாமல் பலரும் மின்னல் வேகத்தில் பலருக்கும் ஃபார்வேர்டு செய்துவிட்டார்கள். தற்போதுவரை கொரோனா பாதிப்புக்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்த தவறான செய்தியால் பெங்களூர் வாசிகள் பலரும் பீதியடைந்தனர். வீட்டை விட்டு வெளியே வரவில்லை.


‘ஏ’ வகை ரத்தத்தை கொரோனா எளிதில் தாக்குமா?: ஆய்வில் அதிர்ச்சி தகவல்


இதுகுறித்து பெங்களூர் மாநகர ஆணையர் நியூஸ் மினிட்க்கு அளித்த பேட்டியில், “நானும் அந்த ஃபார்வேடு மேசேஜ்ஜை பார்த்தேன். அது போலியான செய்தி. சில பெங்களூர் நகரவாசிகள் ஒருவருக்கு ஒருவர் அனுப்பி பீதியை உருவாக்கினார்கள். வீட்டிற்குள்ளே இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால், வெளியே போக வேண்டாம் என அர்த்தமில்லை” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close