இயக்குநர் ரத்னகுமார் சேப்பாக்கம் மைதானத்தில் விஜயின் ‘போக்கிரி பொங்கல்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு விஜய்க்கு நன்றி கூறியுள்ளார்.
விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்தது. இந்த விழாவிற்கு விஜய் எப்போதும் இல்லாத மாதிரி கோட் சூட் உடையில் வருகை தந்திருந்தார். அது பேசு பொருளாக மாறியது. அதற்கு , “ஒவ்வொரு தடவையும் ரொம்ப மோசமாக ட்ரஸ் பண்ணிட்டு வரேன்னு காஸ்ட்யூம் டிசைனர் பல்லவி வருத்தப்பட்டார். அவங்கதான் கோட் சூட் கொடுத்தாங்க. நானும் ஓகே இந்த டைம் "நண்பர் அஜித்" மாதிரி ஸ்டைலாக கோட் சூட் போட்டு வரலாம்னு நினைச்சேன். நல்லா இருக்கா?” என ரசிகர்களை பார்த்து கேட்டவர் தன் உடை குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும், ‘இந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், முதல் நாள் படப்பிடிப்பில் சீன் பேப்பரையே கொடுக்கல. அவர் யாரிடமும் அசிஸ்டெண்டா இருந்தவர் இல்லை. பேங்க்ல வேலை பார்த்தவர் ஷாட் ஃபிலிம் எடுத்து அந்த அனுபவத்தை வைத்து சினிமாவுக்கு வந்தவர். அவர் மாநகரம் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தார். ‘கைதி’யை திரும்பத் திரும்ப பார்க்க வைத்தார். ‘மாஸ்டர்’ஐ என்னப் பண்ண போகிறார் என்று எனக்கு தெரியல” என்றார்.
“விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர்” - நடிகர் கமல்ஹாசன்
அடுத்ததாக ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமார் பற்றி விஜய் பேசும் போது, “இவர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர். ‘மாஸ்டர்’ படத்திற்கு அவர் ஸ்கிரீன் பிளே ரைட்டராக வேலை பார்த்திருக்கிறார். இரண்டு படம் டைரக்ட் பண்ணிவிட்டு இந்தப் படத்திற்கு அவர் உதவி செய்யணுமா? என்று கேட்டால், தேவையே இல்ல. ஆனால் செய்துள்ளார். இந்த மாதிரி பாசிடிவ் எனர்ஜி எல்லாம் இந்தப் படத்திற்குள் கூடவே இருந்திருக்கு” என்றார்.
இந்நிலையில், இயக்குநர் ரத்னகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மேட்ச் பார்த்த போது நடனம் ஆடிய காட்சிகள் பதிவாகியுள்ளன. ‘போக்கிரி பொங்கல்’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டத்தை அவர் இன்று நினைவுப்படுத்தி சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அனைத்து வித படப்பிடிப்புகளையும் நிறுத்தி வைக்க முடிவு - ஆர்.கே.செல்வமணி
“2010 ஆண்டு நான் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிய ஆட்டத்தில் போக்கிரி பொங்கல் பாடலுக்கு நடனம் ஆடினேன். ஆனால் இன்று 2020 இன்று அந்த ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. எப்போதும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி தளபதி” என்று கூறியவர் #MasterAudioLaunch என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?