[X] Close

இந்தோனேசியாவில் இருந்து தமிழகம் வந்த வாலிபருக்கு கொரோனா அறிகுறி?

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Young-man-is-being-treated-for-corona-at-government-hospital-in-madurai

இந்தோனேசியாவில் இருந்து உசிலம்பட்டிக்கு வந்த வாலிபருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படுகிறது.


Advertisement

 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வேப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி செல்வம். இவர் இந்தோனேசியாவில் உள்ள டெக்கன் பரு என்ற பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார்.

image


Advertisement

இந்நிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் தனது சொந்த ஊருக்கு திரும்பி வரும் சூழலில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இன்று காலை ஊருக்கு வந்த மூர்த்திக்கு தொடர் இருமல், காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தாமாகவே முன்வந்து அரசு மருத்துவமனையை அணுகிய மூர்த்தியை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

image


Advertisement

மேலும் மூர்த்தியின் சகோதரர் பெருமாளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து இருவரும் கொரோனா தொடர்பான மேற்கட்ட பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சோப்புகள், முகக்கவசம், சானிடைசர்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை


Advertisement

Advertisement
[X] Close