Published : 10,Jun 2017 04:35 AM

எங்களுக்கு இளையராஜா இருக்கார், உங்களுக்கு? விஜய் சேதுபதி கேள்வி!

Ilayaraja-for-me--who-for-you-say-Vijay-Sethupathi

விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம், ‘மேற்குத் தொடர்சி மலை’. சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய லெனின் பாரதி இயக்கியுள்ளார். ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா உட்பட பலர் நடித்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

அப்போது, விஜய் சேதுபதி பேசும்போது, ’இந்தப் படத்தின் இயக்குனர் லெனின், 2013-ல் இந்தக் கதையை எங்கிட்ட சொன்னார். ’இப்ப எங்கிட்ட காசில்ல, வெயிட் பண்ணுங்க. பணம் வந்ததும் பண்றேன்’னு சொன்னேன். அவரும் காத்திருந்தார். சினிமா பற்றிய நிறைய தெரிஞ்சவர். வந்தோம், தயாரிப்பாளர் கிடைச்சார், கதை பண்ணினோம், சம்பாதிச்சோம், போனோம்னு யோசிக்காம இருக்கிறவர் அவர். அவர் சொல்ல விரும்பற, அவருக்கு சரின்னு படற கதைகளை சொல்லணும்னு விரும்பறவர். படத்தை ஆரம்பிச்சார். ஆனா, ஒரு நாள் கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் போனதில்ல. படம் முடிஞ்சு, போட்டுக் காண்பிச்சாங்க. எனக்கு பிடிச்சிருந்தது.

இந்தப் படத்தோட பாட்டு, பின்னணி இசைக்கு நான் அடிமை. அதுக்கு இளையராஜா சார்தான் காரணம். ஒரு தமிழனா, நான் பெருமையா உலகத்தை நோக்கி சொல்ற விஷயம், எங்களுக்கு இளையராஜா இருக்கார். உங்க கூட யார் இருக்கா? அந்தளவுக்கு பெருமைப்படற ஒருத்தரோட நான் வேலை பார்த்திருக்கேன். இந்த படம் சாதாரண மக்களின் வாழ்க்கையை சொல்ற கதையை கொண்ட படம். ஆசை, கனவு, றெக்கை முளைக்கணும்னு எல்லாருமே நினைப்பாங்க. அப்படி இருக்கிற ஒரு சாமானியனோட கதைதான் படம். அவனை சமூகம் எப்படி மாற்றுதுன்னு கதை போகும். கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கிற கதையா இருக்கும்’ என்றார் விஜய் சேதுபதி.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்