[X] Close

குறையாத கொரோனா வைரஸ் பாதிப்பு: உலகளவில் 2760 உயிரிழப்பு !

உலகம்

Coronavirus-spreads-in-Middle-East-and-beyond


சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், 406 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், 52 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 2 ஆயிரத்து 760 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 80 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சீனாவில் 2 ஆயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? - கொரோனாவால் குழப்பத்தில்  கமிட்டி? 

image

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியாவே உள்ளது. கொரோனாவல் அந்நாட்டில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரத்து 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.


Advertisement

image

தவறான தகவல்களை தந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ! 

இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தி டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த சுமார் 813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.


Advertisement

Advertisement
[X] Close