Published : 07,Jun 2017 01:36 PM

தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

Parts-of-Chennai-Silks-building-collapse

தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

சென்னை சில்க்ஸ் கட்டடத்தினை இடிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணியில் ஈடுபட்டிருந்த ஜா கட்டர் இயந்திரத்தின் மீது, கட்டடத்தின் மேற்பகுதியில் இருந்த மின்தூக்கி திடீரென விழுந்தது. இதனால், கட்டடம் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இயந்திரத்தினை சரிசெய்யும் பணி தற்போது நடந்துவருகிறது.   

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மே 31ல் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தை அணுகமுடியாத காரணத்தால் 2 நாட்களாக தீப்பிடித்து எரிந்தது. ஆபத்தான நிலையில் இருந்த கட்டடத்தின் எஞ்சிய பகுதிகளை கடந்த சில நாட்களாக இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 நாட்களில் கட்டடத்தை இடிக்கும் பணிகள் நிறைவடையும் என்று கூறப்பட்ட நிலையில், இன்று வரை தொடர்ந்து இடிக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்