[X] Close

இத்தாலியில் 79 பேருக்கு கொரோனா: இருவர் உயிரிழப்பு

உலகம்

Coronavirus-Italy-imposes-strict-lockdown-in-outbreak-hotspots

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 79 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement

image

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், லாம்பார்டி மாகாணத்தில் 77 வயது மூதாட்டி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவந்துள்ளது. இதேபோல், வெனீடோ மாகாணத்தில் 78 வயது முதியவர் ஒருவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.


Advertisement

இந்தியா வரும் ட்ரம்ப்: பாதுகாப்பு பணியில் 5 சிங்கவால் குரங்குகள்..! 

image

இதனால், லாம்பார்டி, வெனீடோ மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் கல்வி நிலையங்கள், கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. அங்கு நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Advertisement

image

பாலியல் தொல்லை தடைச் சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம் 

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ‌மட்டும் ‌97 ‌பேர்‌‌ உயிரிழந்திருப்பதாக சீன ‌‌அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 6‌48 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக‌ கூ‌றப்பட்டுள்ள‌து‌.‌ இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 93‌6 ஆக அதிகரித்துள்ளது. ‌


Advertisement

Advertisement
[X] Close