Published : 21,Feb 2020 04:37 PM
‘அரிசிக்குப் பதில் பணம்’ - புதுச்சேரி ஆளுநர் உத்தரவை உறுதி செய்த நீதிமன்றம்

புதுச்சேரியில் ரேசன் அரிசிக்குப் பதிலாகப் பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியிருந்த நிலையில், இலவச அரிசுக்குப் பதிலாகப் பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்று புதுவையில் அரிசிக்குப் பதில் பணம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.
ஏடிஎம் வரும் முதியவர்களை குறி வைத்து பண மோசடி - தேடப்பட்ட நபர் கைது
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அரிசிக்குப் பதில் பணம் வழங்கலாமா என்பது குறித்த பிரச்னையில், குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல் படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்குப் புதுச்சேரி அரசு கட்டுப்பட வேண்டும் எனக் கூறினார்.
எனவே துணைநிலை ஆளுநரின் உத்தரவை உறுதி செய்து, முதல்வர் நாராயணசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.