Published : 21,Feb 2020 06:01 AM
முதல்முறையாக ரூ. 4 ஆயிரத்தை தாண்டியது ஒரு கிராம் ஆபரணத் தங்கம்

ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 34 உயர்ந்து ரூ. 4,012-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 272 உயர்ந்து ரூ. 32,096 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
படப்பிடிப்பில் விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு
ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 4 ஆயிரத்தையும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 32 ஆயிரத்தையும் தாண்டியது இதுவே முதல்முறை. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ. 52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் பிஎஸ்-6 என்ஜின்.. பிஎஸ்-4 என்ஜினால் என்னதான் பிரச்னை..?
இதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 36 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 213 ரூபாயாகவும் சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 704 ரூபாயாகவும் உள்ளது.
நேற்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 3 ஆயிரத்து 980 ரூபாய்க்கும், ஒரு சவரன் 31 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.