நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் பிரபலமான காதல் ஜோடியாக வலம் வருகின்றனர். காதலர் தின பரிசாக விக்னேஷ் சிவன், நடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.
இந்நிலையில், நயன்தாராவுடன் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடியது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவன் பதிவேற்றியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
90 லட்சம் பார்வையாளர்களை கடந்த விஜயின் ‘குட்டிக் கதை’ பாடல்
விக்னேஷ் சிவன் அவரது பதிவில், “என் அழகான கதைக்கு இப்போது 5 வயதாகிறது. காத்துவாக்குல 5 வருடங்கள் அழகான தருணங்களால், அன்பின் சுமைகளால் நிரம்பியுள்ளன” எனக் கூறியுள்ள விக்னேஷ், நடிகை நயன்தாரா என இதற்கு ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார். மேலும் அதில், “ உங்கள் நிபந்தனையற்ற அன்பினாலும் பாசத்தாலும் தினமும் ஒரு காதலர் தினம்தான்” எனக் கூறியுள்ளார்.
இந்த ஜோடி இதுவரை ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் காதல் உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இது போன்ற ஒரு நிகழ்வு மூலம் இவர்கள் காதலர்கள்தான் என்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்