[X] Close

சாலை விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

தமிழ்நாடு

collage-boy--Death-in-Accident

 

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர் லாரியில் மோதி உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மேல்திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இவரது மகன் சந்தோஷ்குமார் (18). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சந்தோஷ்குமார், அவரது இருசக்கர வாகனத்தில் நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மாநில நெடுஞ்சாலையிலுள்ள சந்தானகோபாலபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.


Advertisement

image

அப்போது, எதிரே வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

image


Advertisement

Advertisement

Advertisement
[X] Close