
இந்தியாவை மீண்டும் பழங்காலத்துக்கே அழைத்துச் செல்லும் குறுகிய மனப்பான்மையுடன் கூடிய நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் உண்மைத்தன்மையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட காங்கிரஸ் தயாராக இருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்க துணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் செல்வதாகவும் முதலீடுகள் குறைந்து விட்டதாகவும் கவலை தெரிவித்தார்.