Published : 06,Feb 2020 04:46 PM
விவசாயி தவறவிட்ட ரூ.74,000 பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்..!

ஆட்டோவில் தவறவிட்ட 74 ஆயிரம் ரூபாய் பணத்தை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தேனியில் விவசாயி ஒருவர் 74 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வைப்புத் தொகை பத்திரத்தை ஆட்டோவில் தவறவிட்டுள்ளார். அந்த ஆவணத்தையும் பணத்தையும் காவல்துறையினரிடம் ஓட்டுநர் நேர்மையாக ஒப்படைத்துள்ளார். உரிய விசாரணை மூலம் அதனை சம்பந்தப்பட்ட நபரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஆண்டிப்பட்டி அருகே அம்மாவாசை என்ற விவசாயி ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த 74 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான வைப்புத் தொகை பத்திரத்தை அதிலேயே தவறவிட்டு சென்றுள்ளார்.
முகங்களில் ரத்த தழும்பு... கொரோனாவை ஒழிக்க பணியாற்றும் மருத்துவ ஊழியர்களின் நிலை..!
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அழகர்சாமி என்பவர் விவசாயி தவற விட்ட பணத்தை ஆண்டிப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட விவசாயியை அழைத்து பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.