[X] Close

அமெரிக்கா-ஈரான் இடையே போர்ப் பதற்றம்.. இந்திய பொருளாதாரம் எந்தவகையில் பாதிக்கும்..?

இந்தியா,உலகம்

US-IRAN-WAR-IMPACT-FOR-INDIA

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்ப் பதற்றம் நிலவுவது பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவின் பொருளாதாரத்தை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.


Advertisement

இந்தியாவில் ஏற்கெனவே பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், அமெரிக்கா - ஈரான் போர்ப்பதற்றம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டில்‌ இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருந்த நிலையில் நடப்பாண்டில் அது 5 சதவிகிதமாகக் குறையும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

Image result for ஈரான் அமெரிக்கா


Advertisement

இந்நிலையில் 80 சதவிகிதம் அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு, அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்ப்பதற்றம் பாதிப்பை ஏற்படுத்தும் நிலைதான் உள்ளது. 2015-ஆம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். பின்னர் 2018-ஆம் ஆண்டு ஈரானுடன் மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது. அப்போது இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா அறிவித்தது. அதற்கான காலக்கெடு கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த நிலையில், அப்போதிலிருந்து இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கு‌தை நிறுத்திக் கொண்டது.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததில் இந்தியாவிற்கு சில சலுகைகள் கிடைத்து வந்தன. குறிப்பாக மற்ற அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது விலையில் 24 டாலர் வரை குறைத்து வழங்கியது. அதுமட்டுமல்லாமல் போக்குவர‌த்து செலவு, காப்பீடு உள்ளிட்டவைகளில் ஈரான் இந்தியாவுக்கு சலுகைகள் வழங்கி‌யது.

Image result for ஈரான் அமெரிக்கா


Advertisement

2018-19-ஆம் ஆண்டில் 23.9 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை ஈரானிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த நிலையில், 2019ஆம் ஆண்டு மே மாதம் வரை வெறும் 1.7 மில்லியன் டன் அளவிற்கே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது. இந்தியாவுக்கு ஈரான் வழங்கி வந்த சலுகைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டதால், மற்ற நாடுகளிலிருந்து அதிக விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படும். கடந்த ஒரு வாரத்தில் பிரெண்ட் கச்சா விலை 8 சதவிகிதம் வரை அதிகரித்து ஒரு பீப்பாய் 71 டாலர் என உச்சத்தை தொட்டது. இதனால் வரும் நாட்களி‌ல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Image result for ஈரான் அமெரிக்கா

இருநாடுகளுக்கும் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக இந்தியாவில், ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டிருப்பது, பங்குச் சந்தைகள் சரிவு, தங்கம் விலை வரலாறு‌ காணாத‌ விலையேற்றம் உள்ளிட்டவைகளும் சாதாரண மக்களை பாதிக்கத்தான் செய்கிறது. இதுபோன்ற பாதிப்புகள் ஒருபுறமிருக்க, ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதிலும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவிலிருந்து அரிசி, தேயிலை, இரும்பு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவைகள் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா- ஈரான் போர்ப்பதற்றத்தால் இந்தியா ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இறக்குமதி செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அன்னியசெலாவணி பற்றாக்குறை அதிகரிக்கும் அபா‌யம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன் ஈரானில் அமெரிக்கா சந்தித்த பின்னடைவுகள்..!


Advertisement

Advertisement
[X] Close