4வது இடத்தை குறிவைக்கும் RCB! CSK தான் அடுத்த பலியாடு! அரையிறுதியை தக்கவைக்குமா?

குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றிபெற்றது.
RCB
RCBX

287 ரன்களை விட்டுக்கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஆர்சிபி அணி, தங்களுடைய படுமோசமான பந்துவீச்சு காரணமாக தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் என்ற மோசமான நிலைக்கு சென்றது.

கிட்டத்தட்ட நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கே சென்ற ஆர்சிபி அணி, மீதமிருக்கும் போட்டிகளில் வாழ்வா-சாவா போராட்டம் நடத்திவருகிறது. இனி எங்களுக்கு ஒவ்வொரு போட்டியும் செமிபைனல் போட்டிதான் என ஆர்சிபி பயிற்சியாளர் கூற, பந்துவீச்சு-பேட்டிங் இரண்டிலும் கம்பேக் கொடுத்திருக்கும் ஆர்சிபி அணி ”எந்த அணியை காலிசெய்யலாம்” என விளையாடிவருகிறது.

RCB
RCB

முதல் அடியாக சன்ரைசர்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து சம்பவம் செய்த ஆர்சிபி அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியையும் அவர்களின் இடத்திலேயே வைத்து மரண அடி கொடுத்தது.

”இது உண்மையில் ஆர்சிபி அணி தானா” என மிரட்டிவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தங்களுடைய அரையிறுதிவாய்ப்பை தக்கவைக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

RCB
மும்பை அணியின் கதை முடிந்துவிட்டது.. யாருமே கேப்டனை மதிப்பது இல்லை! Hardik-ன் நிம்மதியை சிதைத்த MI!

அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய RCB!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூபிளெசி பந்துவீச்சை தேர்வுசெய்ய, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கமே ஒரு தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ், முதல் ஓவரிலேயே ரிதிமான் சாஹாவை வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார். உடன் அடுத்த ஓவரில் கில்லை சிராஜ் வெளியேற்ற, டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரராக அசத்திவரும் சாய்சுதர்சனை காம்ரான் க்ரீன் 6 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.

siraj
siraj

19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என மாற 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாருக் கான் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய சாருக் கான் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட, மறுமுனையில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த டேவிட் மில்லர் அவருடைய பங்கிற்கு மிரட்டிவிட்டார். சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, 37 ரன்னில் சாருக்கானை ரன் அவுட்டில் வெளியேற்றிய விராட் கோலி விக்கெட்டை எடுத்துவந்தார். உடன் ஆபத்தான வீரராக தெரிந்த டேவிட் மில்லரை 30 ரன்னில் வெளியேற்றினார் கரன் ஷர்மா.

விராட் கோலி
விராட் கோலி

இரண்டு அதிரடி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, ஒரு பெரிய டோட்டலை நோக்கி சென்ற குஜராத் அணியின் எண்ணத்தை உடைத்தது ஆர்சிபி. ஆனால் அடுத்து களத்திற்கு வந்த ராகுல் திவேத்தியா மற்றும் ரசீத் கான் இருவரும் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விரட்டி ரன்களை எடுத்துவர போராடினர். ஆனால் சரியான இடைவெளியில் விக்கெட்டை பறித்த ஆர்சிபி பவுலர்கள், குஜராத் டைட்டன்ஸ் அணியை 147 ரன்னில் ஆல்அவுட்டாக்கி அசத்தினர்.

சாருக் கான்
சாருக் கான்

மோசமான பந்துவீச்சை வைத்திருக்கும் ஒரு அணி என விமர்சிக்கப்பட்ட ஆர்சிபி அணியில், கிட்டத்தட்ட அனைத்து பவுலர்களும் விக்கெட்டை எடுத்துவந்து ஒரு தரமான பவுலிங்கை வெளிப்படுத்தினர்.

RCB
”இனி எல்லாமே எங்களுக்கு செமிஃபைனல் தான்..” மீண்டுவருவோம் என RCB பயிற்சியாளர் நம்பிக்கை!

18 பந்தில் அரைசதமடித்த டூபிளெசி!

148 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் டூபிளெசி மற்றும் விராட் கோலி இருவரும் போட்டியை 10 ஓவரில் முடிக்கும் ஒரு எண்ணத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து 4 சிக்சர்களை விராட் கோலி பறக்கவிட, பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே கிளப்பிய டூபிளெசிஸ் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 18 பந்தில் அரைசதமடித்து மிரட்டிவிட்டார். முதல் 6 ஓவருக்கே 92 ரன்களை எடுத்துவந்த இந்த ஜோடி, அடுத்த 4 ஓவரில் போட்டியை முடிக்கும் எண்ணத்தில் இருந்தது.

ஆனால் திடீரென தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, அடுத்த 25 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணிக்கு அடிக்குமேல் அடி கொடுத்தது. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் விராட் கோலியும் 42 ரன்னில் வெளியேற ஆட்டம் சூடுபிடித்தது.

“இவங்கள நம்பலாமா வேண்டாமா” என்ற நிலைமைக்கே ஆர்சிபி ரசிகர்கள் செல்ல, கடைசிவரை களத்திலிருந்த தினேஷ் கார்த்திக், ரசீத் கான் வீசிய ஒரே ஓவரில் 16 ரன்களை எடுத்துவந்து சேஸிங்கை எளிதாக்கினார். உடன் இறுதியில் வந்த Swapnil Singh 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடிக்க, 6 ஓவர்களை வெளியில் வைத்து ஒரு அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது ஆர்சிபி அணி.

RCB
RCB

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திலிருந்த ஆர்சிபி அணி 7வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

RCB
“நாங்கள் வெற்றிக்கு திரும்பிவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியாது..” - RCB வீரர் நம்பிக்கை!

RCB அணிக்கு இருக்கும் PlayOffs வாய்ப்பு?

பிளே ஆஃப் வாய்ப்பை பொறுத்தவரையில் ஆர்சிபி அணி 4வது இடத்தை குறிவைத்து அதிரடியாக விளையாடிவருகிறது. ஆர்சிபி அணியால் 4வது இடத்திற்கு முன்னேற முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் டாப் 4 போட்டியலில் இருக்கும் KKR, LSG, SRH அணிகள் மூன்றும் தங்களுக்குள்ளாகவே மோதிக்கொள்ள உள்ளன. அப்படி மோதும் பட்சத்தில் ஏதாவது ஒரு அணி நிச்சயம் 14 புள்ளிகளுடன் முடிக்க நேரிடும். உடன் அடுத்த போட்டிப்பட்டியலில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை ஆர்சிபி அணி வீழ்த்தும் பட்சத்தில், ஆர்சிபி அணிக்கு சாதகமான நிலை உருவாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

RCB
RCB

ஆர்சிபி அணியின் இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திற்கு சரிந்துள்ளது.

RCB
‘3 ஐபிஎல் அணியிலிருந்து 12 வீரர்கள் தேர்வு..’ ஓரங்கட்டப்பட்ட 2 அணி! WC சென்ற IPL அணி வீரர்கள் யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com