நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கான அறிவுரைகளை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை அதனை அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.
NEET Exam
NEET Exampt desk

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

Neet
Neetpt desk

தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது; ஜூன் 14ஆம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில் முறைகேடுகளைத் தடுக்க நீட் தேர்வில் மாணவர்களுக்கு கடுமையான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

NEET Exam
“நான் முதல்வன் திட்டம், அரசு நூலகம் மூலம்..” - UPSC-ல் சாதித்து, தாய்க்கு பெருமை சேர்த்த மகள்!

அதன்படி

‘தேர்வு அறைக்கு 1.30 மணிக்கு முன்பாக வர வேண்டும்

மெட்டல் டிடெக்டர் கொண்டு தேர்வர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்

காகிதம், பென்சில், கால்குலேட்டர், பிரேஸ்லெட், வாட்ச், மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை.

NEET Exam
NEET Exampt desk

எளிதில் தெரியும்படியான தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே நீட் தேர்வு அறையில் அனுமதிக்கப்படும்; ஷூ அணிந்து வர அனுமதியில்லை

முறைகேடு புரிந்தால் 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வெழுத தடை விதிக்கப்படும்’

எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com