Published : 02,Jan 2020 06:27 AM

தன்னம்பிக்கையுடன் விளையாடிய மாற்றுத் திறனாளி மாணவன்... பாராட்டிய சச்சின்...!

Sachin-Tendulkar---Twit

சமீபத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று வைரல் ஆனது. மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் அந்த வீடியோவில், அச்சிறுவன் பெரும் தன்னம்பிக்கையோடு ஊர்ந்து ஓடி ரன் எடுப்பான்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், விளையாட்டு வீரர்களின் ஆதர்சமுமான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கதில் அந்த வீடியோவை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

image

சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர், மாடா ராம் என்ற மாற்றுத்திறனாளி சிறுவன், விளையாடும் இந்த வீடியோவோடு ஒரு உத்வேகமான புத்தாண்டை துவங்குவோம் என பதிவிட்டுள்ளார். மேலும் “இந்த வீடியோ என் மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுத்தது. உங்களுக்கும் இது பிடிக்கும்” என்ற வகையில் அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்