[X] Close

“உள்ளாட்சித் தேர்தல் முடிவை ஜன.2-ல் வெளியிட தடையில்லை” - உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு

Local-Body-Election-results

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2ஆம் தேதி நடத்தத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Advertisement

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்க‌றிஞர், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

நீட் விண்ணப்பம்: சில முக்கிய விவரங்கள் !

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வெவ்வேறானவர்கள் எனக் கூறிய நீதிபதிகள், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close