Published : 23,Dec 2019 10:53 AM

சென்னையில் வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு

Chennai-Corporation-commissioner-Prakash-released-voters-list

சென்னையில் உள்ள 16 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

16 தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 88 ஆயிரத்து 673. அதில் 1‌9 லட்சத்து 15 ஆயிரத்து 718 ஆண் வாக்காளர்களும், 19 லட்சத்து 71 ஆயிரத்து 966 பெண் வாக்காளர்களும், 989 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இதில் 32 ஆயிரத்து 3‌62 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும், 9 ஆயிரத்து 745 வாக்காளர்களின் பெயர் நீக்‌கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி‌ ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக வேளச்சேரி, 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் இன்று முதல் ஜ‌னவரி 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்