[X] Close

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் : திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

Local-Body-Election---DMK-appoints-district-representatives

உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்சிப் பணிகளை மேற்கொள்ள திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்சிப் பணிகளை மேற்கொள்ள திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மா‌வட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணி பொறுப்பாளர்கள், திமுக ‌தலைமைக் ‌கழகம் சார்பில் பணிகளை கவனித்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் மொத்தம் 46 பொறுப்பாளர்களை திமுக நியமித்துள்ள‌து. இதேபோல், தேர்தல் சீர்கேடுகளை முறைப்படுத்தவும், பணிகள் குறித்து தெளிவு பெறவும் சட்ட ஆலோசனைக் குழுவையும் அறிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் 9 வழக்கறிஞர்கள் அடங்கிய சட்‌ட ஆலோசனைக் குழுவையும் திமுக அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close