[X] Close

ட்ரம்ப்-ன் வெட்டப்பட்ட பொம்மை தலையுடன் போஸ் கொடுத்த நடிகை

Kathy-Griffin-s-photo-shoot-sparks-outrage-among-Veterans-of-Foreign-Wars

ட்ரம்ப்-ன் வெட்டப்பட்ட பொம்மை தலையுடன் போஸ் கொடுத்த நடிகை கிரிபினுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
அமெரிக்காவில் நடிகையாக இருக்கும் 56 வயது நிறைந்த கிரிபின், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் உள்ளார்.  இவர் சமீபத்தில் புகழ் பெற்ற புகைப்படக்காரர் டைலர் ஷீல்ட்ஸ் உடன் இணைந்து போட்டோ ஷூட் எடுத்து கொண்டார். அதில் சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அவற்றில் ட்ரம்ப் ரத்தம் நிறைந்த வெட்டப்பட்ட பொம்மை தலையுடன் கிரிபின் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.  இதற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் கிளம்பின. இதனை தொடர்ந்து 31 விநாடிகள் ஓடும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். அதில் கிரிபின் மன்னிப்பு கோரியுள்ளார்.  அவர், இந்த புகைப்படங்களுக்கான எதிர்விளைவுகளை நான் கண்டேன். அந்த புகைப்படம் மக்களை எந்தளவு பாதித்துள்ளது என்பதனை புரிந்து கொண்டேன்.  இது கேலிக்குரியது இல்லை என தெரிந்து கொண்டேன்.  இதற்காக மன்னிப்பு கோருகிறேன்.  நான் தவறாக நடந்து கொண்டுள்ளேன் என அதில் தெரிவித்துள்ளார்.

ஆனால் கிரிபினின் இந்த செயலுக்காக வருட கணக்கில் போடப்பட்ட அவரது ஒப்பந்தத்தினை சி.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் ரத்து செய்துள்ளது.  இதுபற்றி அந்நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எங்களது புதுவருட கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான கிரிபினின் ஒப்பந்தத்தினை நாங்கள் ரத்து செய்து விட்டோம் என தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் பற்றி ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், கிரிபின் தனது செயலுக்காக வெட்கப்பட வேண்டும்.  இந்த புகைப்படத்தினை கண்ட எனது குழந்தைகள், குறிப்பாக, 11 வயது நிறைந்த என்னுடைய மகனான பேரன் வருத்தமடைந்துள்ளான் என தெரிவித்துள்ளார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close